உலகளாவிய ரீதியில் ஓயாத கொரோனா.!! ஒரு கோடியே 53 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்.!!

இன்று காலை (23.07.2020) 9.30 மணிவரையான நிலவரப்படி உலகில் கொரோனா தொற்றுக்குள்ளான, ஒரு கோடியே 53 இலட்சத்து , 65 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 இலட்சத்து 29 ஆயிரத்து 346 பேர் பலியாகி உள்ளதுடன், 91 இலட்சத்து 38 ஆயிரத்து 605 பேர் மீண்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில், 55 இலட்சத்து 97 ஆயிரத்து 378 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது. அந்த வகையில், அமெரிக்காவில் 4,100,875 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 146,183 பேர் மரணித்துள்ளதுடன், 1,942,637 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 1,205 பேர் மரணித்துள்ளனர்.இந்தியாவில் 1,192,915 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,732 பேர் மரணித்துள்ளதுடன் 753,050 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 1,120 பேர் மரணித்துள்ளனர்.
பிரேசிலில் 2,231,871 பேர் கொரோனாவால், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 82,890 பேர் மரணித்துள்ளதுடன், 1,532,138 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 1,293 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.