முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது கொடூரத் தாக்குதல்!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த பாலித தெவரப்பெரும நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தாக்குதலில் அவரது கை, மற்றும் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மத்துகம – வேகந்தல பகுதியில் குடி திட்டம் ஒன்றின் குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய சென்ற போது, ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.காயமடைந்த முன்னாள் எம்.பி. களுத்துறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றும் அவரது உடல்நிலை மோசமாக இல்லையென, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.