திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம்! கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.