வவுனியா ஓமந்தையில் கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்ட ஒரு தொகுதி வெடிபொருட்கள்..!!

வவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஓமந்தை பொலிசார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த பிரதேசவாசி தனது விவசாய கிணற்றினை நீர் இறைத்து கிணற்றினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.இதன்போது கிணற்றினுள் வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து, ஒமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் ஊடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்று புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த கிணற்றிக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 14 மோட்டார் செல்களும் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.