யானைத் தாக்குதலில் காயமடைந்த பெண் விரிவுரையாளர் விமானம் மூலம் இன்று கொழும்பிற்கு..!!

யானையின் தாக்குதலில் தலைப்பகுதியில் கடுமையாக காயமடைந்த கிளிநொச்சி அறிவியல்நகர் வளாக, தொழில்நுட்ப பீட விரிவுரையாளர் காயத்திரி டில்றுக்சி (32) சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.விமானப்படை விமானத்தில் அவர் கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

கிளிநொச்சியில் காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வணக்கத்திற்கு சென்று வரும்போது, அவரும் இன்னொருவரும் காட்டு யானையை எதிர்கொண்டுள்ளனர். இதன்போது அவர்கள் தப்பியோடிய போதும், டில்றுக்கி யானைத் தாக்குதலுக்கு இலக்கானார்.அவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் உயிரிழந்து விட்டதாக முன்னதாக தவறான புரிதலின் அடிப்படையில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.