அலைபேசியை சார்ஜரில் இணைத்து பாடல் கேட்டபடி தூங்கிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்..!!

இரவு உறங்கச் சென்றபோது அலைபேசியை சார்ஜரில் இணைத்துவிட்டு, ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு உறங்கிய இளைஞன் ஒருவர், அலைபேசி வெடித்து உயிரிழந்துள்ளார்.தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிப்ன்ன- துனகதெனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அலைபேசி வெடித்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன், சிகிச்சைப் பலனின்றி நேற்று (21) உயிரிழந்துள்ளார்.வெலிபென்ன- துனகதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.