நோயாளியான தாத்தாவை அழைத்துச் செல்ல லஞ்சம் கேட்ட மருத்துவமனை ஊழியர்…ஆறு வயதுப் பேரன் எடுத்த துணிச்சலான முடிவு..!!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியான வயோதிபரை சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல அங்கு பணியாற்றும் ஊழியர் இலஞ்சம் கேட்டதால் ஆறு வயதுப் பேரன் தானே தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து, சிகிச்சை பெற தள்ளிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் இந்தியாவின்உத்தரபிரதேச மாநிலம் டியோரிய மாவட்டத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.சிடி யாதவ் என்ற முதியவர் தனது உடலில் இருக்கும் காயங்களுக்கு சிகிச்சை பெற இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது பேரன் மற்றும் மகள் அவருடன் தங்கி இருந்தனர். இந்நிலையில், அங்கு உதவியாளராக இருந்த ஊழியர் முதியவரை ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல ரூபாய் 30 கேட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து, தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து பேரன் தள்ளி செல்ல முதியவரின் மகள் முன்னாள் ஸ்ட்ரெச்சரை இழுத்து செல்கின்றார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனையடுத்து பணம் கேட்ட விடுதி உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.