கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியத் தவறிய 1,406 பேருக்கு எச்சரிக்கை.!!

முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பவற்றை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் 2,521 நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரக் காலப் பகுதியிலேய முகக் கவசம் அணியத் தவறிய 1,406 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 1,115 பேருக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேநேரம் இக் காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 393 பேர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.166 பேர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும், 102 பேர் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.