வீதித் தடையில் ஏற்பட்ட விபத்து…பெரும் தொகைப் பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் அதிகாரிகள்..!!

புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடையில் நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாரவில பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவராகும்.

நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் வீதி தடையில் மோதியுள்ளது.இதன் போது, குறித்த நபரின் பையில் இருந்த 92 ஆயிரம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் குறித்த நபரை திட்டித் தாக்கியதுடன் பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் காரணமாக, குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.