அதிகாலை வேளையில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து பயங்கரக் கொள்ளை!! யாழ் மூளாயில் பயங்கரம்!

யாழ்.பொன்னாலை- மூளாய் பகுதியில் இன்று அதிகாலை வாள்கள், கம்பிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி பெருமளவு தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளது.

அதிகாலை 1.45 மணியளவில் குறித்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் வீட்டாரினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.