கொழும்பில் கொரோனா தொற்றுடன் வகுப்பிற்குச் சென்ற மாணவனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி..!! பலருக்கும் கொரோனா பரிசோதனை.!!

பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் உட்பட 65 மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்தே இந்த PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் ஹோமாகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களில் சிறு பிள்ளைகள் இருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.