34வது வயதில் 12வயது மாணவனை கற்பழித்து வாழ்க்கை நடத்திய ஆசிரியை 58வது வயதில் மரணம்..!!

அமெரிக்காவில் மேரி என்னும் 34 வயது ஆசிரியை ஒருவர், எலிமெண்டரி பாடசாலையில் வேலை பார்த்து வந்தார். அந்த சிறுவர் பாடசாலையில் கல்வி கற்ற 12 வயதே ஆன வில்லி எனும் மாணவனை அவர் கற்பழித்தார்.

இந்தச் சம்பவம் 1996ம் ஆண்டு பெரும் பரபரப்பை தோற்றுவித்தது. ஆனால், குறித்த சிறுவன் எந்த குற்றத்தையும் அவர் மேல் சுமத்தவில்லை என்பது தான், பெரிய விடையமாக பேசப்பட்டது.ஏன் எனில் அவனுக்கும் அந்த ஆசிரியையை மிகவும் பிடித்து இருந்தது.இருப்பினும் அமெரிக்க நீதிமன்றம் மேரிக்கு சிறை தண்டனை வழங்கியது. அவர் சிறையை விட்டு வெளியே வந்தவேளை வில்லி 18 வயதை அடையவே, அவர்கள் இருவரும் உடனே திருமணம் செய்து கொண்டார்கள். இந்த செய்தியும் மிகப் பிரபல்யமாக அந்த காலத்தில் பேசப்பட்ட ஒரு விடையம். தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளார்கள்.58 வயதான மேரி நேற்றைய தினம் புற்று நோய் காரணமாக இறந்துள்ளார்.அவரது இளவயதுக் கணவர் படுக்கை அருகே இருந்த காட்சியும்,இறுதிவரை கைகளைப் பிடித்துக் கொண்டே அவர் இருந்த நிலையும், இன்று மீண்டும் அவர்கள் ஒரு பேசுபொருளாக மாறி உள்ளார்கள்.காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அது தான் இதுவோ தெரியவில்லை.