புலம்பெயர் தேசத்தில் மனைவி பிள்ளைகளை வேதனையில் ஆழ்த்திவிட்டு கொரோனாவிற்குப் பலியான தற்பாதுகாப்பு நிபுணர்!!

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளர் குறித்து அவர் மகன் உருக்கமாக பேசியுள்ள நிலையில் அவர் நினைவாக நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் Rommel Bernarte (49). இவர் தனது 9வது வயதில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தார்.Tang Soo Do என்ற கொரியன் கராத்தே தற்காப்பு கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட Rommel அதில் ஜாம்பவானாக திகழ்ந்தார்.இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த Rommel சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார்.Rommel-க்கு Venus என்ற மனைவியும், Ryan (20) என்ற மகனும் Katherine என்ற மகளும் உள்ளனர். Rommel லண்டன், Kent போன்ற இடங்களில் தற்காப்பு பயிற்சி நிலையத்தை நடத்தி வந்தார்.Rommel குறித்து அவர் மகன் Ryan கூறுகையில், உலக கராத்தே தொடரில் பங்கேற்க என்னுடய 14 வயதில் இருந்து தந்தை எனக்கு பயிற்சி கொடுத்தார்.

அவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.அப்படி ஆரோக்கியமாக இருந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது எங்கள் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என கூறியுள்ளார்.கொரோனா பாதிப்பால் இறந்ததால் Rommel-ன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதற்கு பதிலாக Rommel பெயரில் அவர் குடும்பத்தார் நிதி வசூல் செய்து இரண்டு மருத்துவமனைகளுக்கு பணம் கொடுத்துள்ளனர்.இதுவரை £10,000க்கும் அதிகமாக நிதி வசூலானதாக தெரியவந்துள்ளது.