காதலியுடன் செல்பி எடுக்க முற்பட்டவருக்கு நேர்ந்த சோகம்…!!

நெலுவ, தூவிலி எல்லயில் தனது காதலியுடன் நீராட சென்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த நபர் அங்குள்ள கல் ஒன்றின் மீது ஏறி ´செல்பி´ எடுக்க முற்பட்ட போது கால் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளவத்த பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ரத்னராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த நபரின் காதலி கொழும்பில் பிரதான வைத்தியசாலை ஒன்றின் வைத்தியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.