இந்தியாவை புரட்டிப் போடும் கொரோனா…ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்குத் தொற்று..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,155,191ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு முன்எப்போதும் இல்லாத அளவாக தினமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது: செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் மேலும் 587 போ் உயிரிழந்தனா். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துவிட்டது. 402,529 போ் சிகிச்சையில் உள்ளனா். 724,578 போ் குணமடைந்துவிட்டனா்.ஜூலை 20-ஆம் திகதி நிலவரப்படி 14,381,303 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 318,695 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பும் அந்த மாநிலத்தில்தான் மிக அதிக அளவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.