சூரியனால் உலக மக்களுக்கு வரப்போகும் உயிராபத்து!! விஞ்ஞானிகள் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை..!

சூரியனின் வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது,பருவநிலை மாற்றத்தின் காரணமாக எதிர்காலத்தில் கோடை காலங்கள் என்பது மனிதர்கள் பணியாற்றுவதற்கு ஊறு விளைவிக்கும் அளவுக்கு அதிக வெப்பநிலை கொண்டதாக மாறக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெட்டவெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது அல்லது தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.இவர்களுக்கு வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.உடல் தன்னைத்தானே குளிர்விக்க முடியாமல், வெப்பநிலை அபாயகரமான அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து உடலுறுப்புகள் செயலிழப்பது வெப்ப அழுத்தத்தின் விளைவு ஆகும்.உடலிலுள்ள தேவைக்கு அதிகமான வெப்பம் வெளியேறுவதற்கான முக்கிய வழி தோலிலுள்ள வியர்வை ஆவியாவதுதான்.ஆனால், வெளிப்புற காற்று ஈரப்பதத்துடன் இருந்தால் இந்த செயல்முறை முற்றிலும் பாதிக்கப்படும்.உதாரணமாக, தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்று சிகிச்சையில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு கவச உடையானது வைரசிடமிருந்து பாதுகாப்பதற்காக அளவிட முடியாத அடுக்குகளை கொண்டுள்ளது. இதனால், அவற்றை அணிபவர்களின் வியர்வை ஆவியாவது என்பது இயலாத காரியமாகி பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது.உலகளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தால், விரைவில் உலகின் வெப்பமான பகுதிகளில் மிகவும் வெப்பமான நிலையை மட்டுமே காண நேரிடும்.எதிர்காலத்தில் கோடை காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றார்கள்.