நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2728 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 676 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதுவரை 2041பேர் குணமாகியுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.