கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆறு பேர் குணமடைவு.!! தற்போதைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2041 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.