இலங்கை சுகாதார ஊழியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு பிரித்தானியா வழங்கும் துரித விஸா..!!

இலங்கையின் சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு துரிதமாக விசா அனுமதியை வழங்குவதற்காக “ சுகாதார மற்றும் பாதுகாப்பு விசா முறை” என்ற வேலைத்திட்டத்தை பிரித்தானியா முன்னெடுத்துள்ளது.

தகுதியான இலங்கையர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு துரிதமாக விசாவை வழங்குதல், விசா கட்டணங்ளை குறைத்தல் மற்றும் குடியேற்ற சுகாதார மேலதிக கட்டணங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த சில மாதங்களில் உரிய முறையில் நடைமுறைக்கு வரவுள்ள இந்த சுகாதார மற்றும் பராமரிப்பு விசா அனுமதியின் ஊடாக சுகாதார தொழில் துறையினரை பிரித்தானியாவின் தேசிய சுகாதார துறையில் துரிதமாக இணைப்பதற்காக இந்த வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.