யாழ் உரும்பிராயில் சிறப்பாக நடைபெற்ற அங்கஜன் இராமநாதனின் வெற்றியை உறுதிசெய்யும் மக்கள் சந்திப்பு..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதனின் வெற்றியை உறுதி செய்யும் மற்றுமொரு மக்கள் சந்திப்பு யாழ் உரும்பிராய் பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான திரு அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்கால திட்டங்கள் குறித்து ஆதரவாளர்களுக்கு விளக்கமளித்தார். இந் நிகழ்வானது கொரோனா தடுப்பு பொதுச் சுகாதார வழிமுறைகளைப் பின் பற்றி இடம்பெற்றதுடன் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.