க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதில் தொடர்ந்தும் சிக்கல்..!! இன்றைய தினம் வெளிவரும் முக்கிய அறிவிப்பு..!

உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி இன்றைய தினம் அறிவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு நடத்தவுள்ள கலந்துரையாடலை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆணையாளர் தலைமையில் இன்று காலை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐந்தாம் வகுப்பு புலமைப்பரீசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இரண்டாம் திகதி வரை உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டது.எனினும், உயர்தரப் பரீட்சை மேலும் தாமதமாகும் என கல்வி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாடசாலை விடுமுறைகள் தொடர்ந்து நீடிப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.அதற்கமைய இன்றைய தினம் இது தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.