பொதுத் தேர்தல் 2020 தபால் மூல வாக்களிப்பின் ஆறாவது நாள் இன்று.!!

2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஆறாம் நாள் இன்று நடைபெறுகிறது.

இம்முறை தபால்மூல வாக்களிப்புக்காக ஏழு நாட்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அதன் பிரகாரம் 13,14,15,16 மற்றும் 17ஆம் திகதிகளில் அரச ஊழியர்கள் தங்களது வாக்குகளை அளித்திருந்தனர்.
குறித்த தினங்களில் தமது வாக்கினை அளிக்காத வாக்களார்கள் இன்றும் நாளையும் தமது வாக்குகளை அளிக்க முடியும்.இந் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.