கருங்கல்லைப் போல பலமாக இருந்த நல்லாட்சியை தலையால் மோதி நொருக்கிவிட்டோம்..!! மார்தட்டும் பொதுஜன பெரமுன…!!

உலக நாடுகள் அனைத்தினதும் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட கருங்கல்லை போல பலமாக இருந்த நல்லாட்சியை உடைத்தெறிந்துவிட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது;

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதியன்றே நல்லாட்சிக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்திருந்தாகவும், அப்போது நல்லாட்சி அரசாங்கம் சகல நாடுகளினதும் ஆதரவைப் பெற்றுக்கொண்ட ஒரு கருங்கல்லை போல உறுதியாகவே இருந்ததெனவும் தெரிவித்தார்.உலக நாடுகளிடத்திலும், உள்நாட்டில் நாடாளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளினதும் விருப்பத்தை பெற்றுக்கொண்ட​தொரு ஆட்சியை எதிர்க்கும் செயற்பாட்டை கருங்கல்லில் தலையை மோதும் செயற்பா​டகவே பலரும் கண்டதாக தெரிவித்த அவர், இன்று தலையால் மோதியே கருங்கல்லை நொருக்கிவிட்டோம் என்றார்.மேற்படி, செயற்பாட்டின் விளைவாக நாட்டுப் பற்று கொண்ட ஒரு அரசாங்கம் உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.