ஒலியை விட 17 மடங்கு வேகம் கூடிய ஹைப்பர் சொனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது அமெரிக்கா.!!

ஒலியைவிட 17 மடங்கு வேகமாக செல்லக்கூடிய ஹைபர் சொனிக் (Hypersonic) ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.

இந்தச் சோதனை, கடந்த மார்ச் இறுதியில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் நடைபெற்றதாக தற்போது அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒலியை விட 17 மடங்கு வேகமாக செல்லும் ஹைபர் சொனிக் ஏவுகணை குறித்து தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்துவந்தார். இந்நிலையில், சோதனை இடம்பெற்றமை குறித்து அமெரிக்க இராணுவம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.இதேவேளை, அடுத்துவரும் நான்கு ஆண்டுகளில் பசுபிக் பெருங்கடலில் குறைந்தது 40 ஹைபர்சொனிக் ஏவுகணைகளை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, நவீனமயமாக்கலுக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பொறியியல் துறை இயக்குநர் மார்க் லுயிஸ், 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட்ட ஹைபர் சொனிக் முன்மாதிரி ஆயுதங்களின் சோதனை முடிவடையும் என்றும், அதன்பின்னர் அந்த ஆயுதங்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்படும் என்றும் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.