தங்கநகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து காத்திருக்கும் ஏமாற்றம்..!!மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை.!!

உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய இதுவரையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1808 .58 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது நூற்றுக்கு 0.7 வீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதனால், அதன் தாக்கம் தங்கத்தின் மீது செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1 இலட்சத்திற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.