ஞாயிற்றுக்கிழமைகளில் யாழில் இடம்பெறும் மாட்டுவண்டிச் சவாரி… !! சீறிப் பாய்ந்து ஓடும் காளைகள்..!! பார்ப்பதற்கு படையெடுக்கும் ரசிகர்கள்..!!

வடமாகாணத்தில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மாட்டு வண்டில் சவாரி கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் நடைபெறவில்லை. எனினும், கடந்த வாரம் நீர்வேலி திடலில் மூன்று மாதங்களில் பின்னர் என்றும் இல்லாதவாறு அதிகளவு மக்கள் தொகையுடனும் விறுவிறுப்பாகவும் நடந்தேறியது.நடப்பு வெற்றியாளர்கள், வேறு மாவட்ட போட்டியாளர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இது மட்டும் இல்லாமல் corona பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்தில், நீர்வேலி திடலில் சுகாதார பரிசோதகர்கள் நின்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஒவ்வொரு ஞாயிறுகளில் இந்த சவாரி இடம்பெறுவதாகவும், சனிக்கிழமைகளில் மன்னார் பகுதியில் சவாரி இடம்பெறுவதாகவும் அங்கு கூடியிருந்த மக்கள் கூறியுள்ளனர்.குறிப்பிட்ட சவாரி ஆனது பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருவதாகவும், இதை தமது பாரம்பரியமாக எண்ணுவதாகவும் அங்கு போட்டியில் கலந்து கொண்டவர்கள் கூறி இருந்தார்கள். இதனை “We Are Voyagers” அணியினர் காணொளியாக்கி அவர்களது YouTube பக்கத்தில் பதிவேற்றி உள்ளனர். மேலும், தகவல்களை பெற அவர்களது காணொளியைப் பாருங்கள்.மகேந்திரம் ஐயா 21 வயதில் தனது முதலாவது மாட்டுவண்டில் சவாரி ஓட ஆரம்பித்து கிட்டத்தட்ட 53 வருடங்களாக பல சவாரிகள் ஓடியதுடன் பல தடவை முதாலாம் இடத்தை தட்டி சென்றது மட்டுமில்லாமல், சிறந்த மாட்டுவண்டில் சவாரி ஓட்டுநர் விருதையும் பெற்றவர்.

74 வயதாகியும் இன்னமும் மாட்டு வண்டில் சவாரி ஓடி தனது வீரத்தை காட்டி, பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இந்த நிகழ்வில் மகேந்திரம் ஐயா அவர்கள் அங்கு சமூகம் அளித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.