மது விருந்தில் களேபரம்….யாழ் பல்கலை சிங்கள மாணவனை வெட்டிய தமிழ் மாணவன் அதிரடிக் கைது..!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் தமிழ், சிங்கள மாணவர்கள் இருவரிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் வெட்டுக் காயத்திற்கு இலக்காகியுள்ளார்.மற்றைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) இரவு இந்த சம்பவம் நடந்தது. பழம் வீதியிலுள்ள ஆண்கள் தனியார் விடுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விடுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட தமிழ், சிங்கள மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் சிங்கள மாணவன் மீது, தமிழ் மாணவன் கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.காயமடைந்த சிங்கள மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதலை நடத்திய தமிழ் மாணவனை, யாழ்ப்பாணப் பொலிசார் கைது செய்துள்ளனர்.