இந்தியாவில் ஒரே நாளில் 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா!! இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10இலட்சத்து 40ஆயிரத்து 450 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்தவகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,285ஆக உயர்வடைந்து காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்து 54ஆயிரத்து 078 ஆக காணப்படுவதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.