திருகோணமலையில் 21 வயது இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!!

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதன்போது புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டிலக்சன் (21 வயது) என்பவரே தூக்கில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த இளைஞனின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.