இலங்கையில் நேற்று மட்டும் 10 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.!!

நேற்று பத்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,697 ஆக உயர்ந்துள்ளது.

சேனபுர புனர்வாழ்வு மையத்தின் மூன்று கைதிகளும், கந்தக்காடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் மூன்று கைதிகளும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.கந்தகாடு மையத்தில் இருந்து தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த மேலும் மூவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 12 வயது சிறுவனும் உள்ளடக்கம்.இதில், இருவர் கம்பஹாவை சேர்ந்தவர்கள். சிறுவன் ராஜாங்கணையை சேர்ந்தவர்.இந்தியாவிலிருந்து வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதன்படி 674 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,012 பேர் குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 99 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.