இருவருக்கு உறுதியானது கொரோனா தொற்று!! பிரச்சாரத்தை கைவிட்டார் கோட்டாபாய..!!

தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றியதாக நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இந்த இரண்டு பேரும் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி செயற்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இருவருடன் நெருங்கி செயற்பட்ட 250 பேருக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டிய சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, ஜனாதிபதியின் தலைமையில் தெஹியத்தகண்டியவில் இடம்பெறவிருந்த தேர்தல் பிரச்சார கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்த செய்தி கிடைத்தமையினால் ஜனாதிபதியின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்காக பொதுஜன பெரனமுன செயற்பாட்டாளர் பாரிய பிரச்சார நடவடிக்கையும் மேற்கொண்டிருந்தனர்.கொரோனா வைரஸ் பரவும் பிரதேசங்களில் ஜனாதிபதியின் கூட்டம் இரத்து செய்யப்பட்ட போதிலும் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் வழமையை போன்று இடம்பெறுகின்றது. ஆபத்தான பகுதிகளில் மக்கள் தங்கள் தினசரி நடவடிக்கைகளை வழமையை போன்று செயற்பட்டு வருகின்றார்கள் எனவும் கூறப்படுகின்றது.