கொடிய கொரோனா நோய்க்கு இலக்காகி பிரித்தானியாவில் பரிதாபமாக மரணமான பூநகரி இளைஞன்…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையர்கள் சிலரும் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.பிரித்தானியாவில் மட்டும் நேற்றுவரை இலங்கையர்கள் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதில் இரண்டு மருத்துவர்களும், இரண்டு தமிழர்களும் என்றும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் இன்றைய தினம் லண்டனில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸினை வதிவிடமாகக் கொண்ட பூநகரியின் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகன் ஆனந்தவர்ணன் என்ற இளைஞனே இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த இளைஞன் தனியார் ஊடகம் ஒன்றில் செய்தியாசிரியராகவும் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனந்தவர்ணன் , பிரபல தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.இக் கொடிய கொரோனா தாக்கத்தை எதிர்க்க முடியாது உயிரிழந்துள்ளார்.30 வயது நிரம்பிய ஆனந்தவர்ணன் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா, இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 14 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.