இலங்கையில் 12 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2012 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் 665 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் மரணித்துள்ளனர்.