பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள புதிய தீர்மானம்..!!

பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை திறக்கக் கூடிய வகையிலான சூழல் தற்போது உள்ளதா என அமைச்சு, சுகாதார சேவை பணிப்பாளரிடம் வினவப்பட்டுள்ளது. எனினும் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளமையினால் கடந்த திங்கட்கிழமை முதல் ஒருவாரம் பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.கல்வி அமைச்சின் முன்னைய திட்டமிடலுக்கமைய பாடசாலைகளின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி திறக்கப்படவிருந்தது.இரண்டாவது கட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அழைக்கப்படவிருந்தனர். எனினும், அந்த கட்டத்தை திறப்பதற்கு சுகாதார பணிப்பாளரின் பரிந்துரை கிடைத்த பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.