மீண்டும் யாழ் வருகிறார் ரணில்..!!

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் வருகிறார்.எதிர்வரும் வியாழக்கிழமை (23) மாலை யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.மேலும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மதகுருமார்கள், கல்வியாளர்களுடன் சந்திப்பினையும் மேற்கொள்ளவுள்ளார்