கொரோனா தொற்று குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து மேலும் மூவர் இன்று வெளியேற்றம்..!!

கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் குணமடைந்துள்ளனர்.குறித்த மூவரும் இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலையினை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதன்காரணமாக கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில் குணமானவர்களின் எண்ணிக்கை 47 பேர் ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில் இதுவரையில் 189 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 135 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.