யாழ்.மாவட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்..!!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், மாரடைப்பால் இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.தேர்தலிற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே, இன்று காலை அவரது வீட்டில் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.மாவீரர் குடும்பத்தை சேர்ந்த அவர் இனப்பற்றாளராக திகழ்ந்து, பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்திருந்ததுடன், இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேட்சைகுழு 14 இல், இலக்கம் ஒன்றில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.