சிறையிலிருந்து வெளியே வரும்போது இப்படித் தான் இருக்க வேண்டும்…. மாஸ் காட்டத் தயாராகும் சசிகலாவின் மாஸ்டர் பிளான்..!!

சிறையில் இருந்து விடுதலையாகவுள்ள சசிகலா தற்போது விடுதலையை விரும்பவில்லை என்றும், தான் வெளியில் வரும் போது, வரவேற்க ஒரு பெரிய கூட்டம், தினந்தோறும் ஏதேனும் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகால அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளதாக செய்தி வெளியானது.அதுமட்டுமின்றி நீதிமன்றம் விதித்த அபராத தொகையான 10 கோடி ரூபாயை கட்டிவிட்டால், அடுத்த சில நாட்களிலே சசிகலா விடுதலையாக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இப்படி வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தும் சசிகலா ஏன் வெளியில் வரமாக இருக்கிறார் என்பது குறித்து, சசிகலாவின் நெருங்கிய வட்டாரத்திடம் விசாரித்த போது, அவருக்கு இப்போது வெளியில் வர விருப்பமில்லை என்று கூறுகிறார்கள்.ஏனெனில், தற்போது இருக்கும் கொரோனா பரவல், பொது போக்குவரத்து முடக்கம் போன்றவைகளால், தன்னுடைய விடுதலையை மாஸ் காட்ட முடியாது என்று சசிகலா நினைக்கிறாராம்.அதுமட்டுமின்றி அப்படி வெளியில் வந்தால் கூட, வீட்டிற்குள்ளே தான் இந்த கொரோனா முடியும் வரை அடைந்திருக்க வேண்டும், கட்சிப் பணிகள் எதையும் பார்க்க முடியாது, யாரையும் சந்திக்கவும் முடியாது.இதனால், இது போன்ற சூழ்நிலையில் வெளியில் வந்தால், இது ஒரு செய்தியாக மட்டுமே இருக்கும் தவிர ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கது.இதற்காகவா நாம் இத்தனை கஷ்டப்பட்டோம், சிறையில் இத்தனை ஆண்டுகள் இருந்தோம். நம்மை விட்டுச் சென்ற அனைத்தும் நம் கைக்கு கிடைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தை நாம் பிடிக்க வேண்டும்.அதற்கு நான் வெளியே வருவது மாற்றத்தை உண்டாக்க்க வேண்டும், தான் வந்த ஒவ்வொரு நாளும் அரசியல் மாற்றம் நிகழ வேண்டும், இதுவே அவர் வெளியில் வருவதற்கு தள்ளிப் போக காரணம் என்று கூறுகின்றனர்.மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியில் செல்ல பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது என்பதும் கூடுதல் தகவல்.