மின் கட்டணம் தொடர்பில் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மின் சக்தி அமைச்சு..!!

மின் பாவனையாளர்களின் பெப்ரவரி மாத மின் பட்டியல் கண்டனமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளிவில் அறவிடப்பட்டதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த நிலையில் அதுதொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மின் பாவனையாளர்கள், பெப்ரவரி மாத மின் பட்டியல் குறிப்பிடப்பட்ட கண்டன அளவையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு செலுத்த முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகளவில் வந்துள்ளதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், அந்த குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.இதனையடுத்தே மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.