கொரோனாவினால் பெருமளவு தனியார் ஊழியர்கள் தொழிலை இழக்கும் ஆபத்து..!!

இலங்கையில் தீவிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனியார் துறைகளில் பணியாற்றும் பல இலட்சம் பேர் தொழில் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழியர்களின் தொழில் நிலைமையை உறுதி செய்யும் நோக்கில் உடனடியாக தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை தேசிய தொழிற்சங்க நிலையத்தின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினருமான கே.டீ.லால்காந்த் விடுத்துள்ளார்.

சமகால தொழில் அமைச்சர் தனியார் துறையினருக்கும் பொறுப்பானவராகும். அடுத்து வரும் மாதங்களில் தனியார்துறை ஊழியர்கள் சம்பளத்தை பெறுவதில் பெரும் சிக்கல் நிலை ஏற்படும்.இது தொடர்பில் தொழில் அமைச்சர் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.நெருக்கடி நிலைமை தொடர்பில், தீர்வினை பெறுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கே.டீ.லால்காந்த் மேலும் தெரிவித்துள்ளார்.