மீண்டும் உக்கிர ஆட்டத்தை ஆரம்பித்த சூரியன்! சனியின் பார்வையில் விழுந்த 5 ராசிகள்….!! யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா?

சூரியன் கடகத்திலும் சனி மகரத்திலும் என எதிரெதிர் நிலையில் இருப்பதால் சூரியன் மற்றும் சனியின் பார்வை விழக்கூடிய சில குறிப்பிட்ட ராசிகள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.கவனமாக இருக்க வேண்டிய ராசிகள், மற்றும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.சூரிய பகவான் கடக ராசியில் ஜூலை 16ம் தேதி சஞ்சரிக்கும் போது ஆடி மாதம் பிறக்கிறது. கடக ராசியில் சூரியன் வரும் போது சூரியன் மற்றும் மகர ராசியில் இருக்கும் சனி பகவான் ஒருவருக்கொருவர் 7ம் இடத்தில் எதிரெதிராக அமர்கின்றனர்.

நவகிரகங்களின் தலைவர் சூரிய பகவான். இவர் ஜோதிட விதிகளின் படி சனி பகவானின் அதிகாரத்தையும், அரசாங்கத்தையும், ஒருவருக்கு கிடைக்கும் பதவி, மரியாதையைக் குறிப்பிடக்கூடிய ஒரு காரணியாகக் கருதப்படுகிறது.அதே சமயம் சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர் என்றும் கடின உழைப்பாளி என்று கூறப்படுகிறது.சூரியனின் மகன் சனிபகவான் என்றாலும், இரு ராசிக்கும் நட்பு கிரகம் இல்லை. இதனால் இரு கிரகமும் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயல்வதால், இந்த 5 ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மிதுனம்:சூரிய-சனியின் இந்த அமர்வு காரணமாக மிதுன ராசியினர் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்துடனும் அதிகாரிகளுடனும் தேவையற்ற சங்கடமான சூழ்நிலையை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.எனவே எந்தவிதமான தகராற்றிலிருந்தும் விலகி இருங்கள். செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே பொருளாதார சமநிலையை பராமரிக்க சேமிப்பு மிக முக்கியம். ஒவ்வொரு செலவையும் கவனமாக மேற்கொள்ளவும். விரக்தி மன நிலை வரலாம், அதனால் வரக்கூடிய கோபத்தை வீட்டு உறுப்பினர்கள் மீது காண்பிப்பதைத் தவிர்க்கவும். எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். இறைவழிபாடு உங்களை மோசமான நிலையிலிருந்து காக்கும்.

​கடகம்:சூரியன் மற்றும் சனி எதிரெதிர் அமரும் நிலையால் உங்கள் வேலை மற்றும் தொழிலில் சிக்கல்களை ஏற்படலாம். சூரியன் சில நேரங்களில் ஒரு மோசமான பலன்களைத் தரக்கூடிய கிரகம் என்று அழைக்கப்படுகிறது, எனவே உங்கள் கேட்கும் திறன் பார்வை திறன் பாதிக்கப்படலாம். மனதை அமைதி பாதுகாக்கவும். உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதால் மேலதிகாரிகளின் கடுஞ்சொல்லிருந்து தப்பிக்கலாம். அரசியல் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேரிட வாய்ப்புள்ளது.. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி சிக்கல்கள் இருக்கலாம், இதன் காரணமாக உங்கள் பணிகள் பாதிக்கப்படலாம். கண்களில் அதிக சிரமம் கொடுக்க வேண்டாம், அது பாதிப்பு ஏற்படுத்தக் கூடும்.

​சிம்மம்:அடுத்த ஒரு மாதத்திற்கு உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்பத்தில் கருத்து மோதல்கள் ஏற்படக்கூடும், இது வீட்டுச் சூழலைக் கெடுக்கும். உங்கள் மனைவியுடன் பொறுமையாகப் பேசுவது நல்லது, நீங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும் சற்று பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம், இல்லையெனில் சில தீங்கு விளையாலாம். பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். இதனால் பெரிய பொருள், பண இழப்பை தவிர்க்கலாம்.

​மகரம்:இந்த நேரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இழக்க நேரிடலாம். நீங்கள் உணர்ச்சி மிகுதியால் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் எந்தவிதமான பந்தையம், போட்டியைத் தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் எங்கும் முதலீடு செய்ய வேண்டாம். மேலும், சட்டத்தை மீறும் எதையும் செய்ய வேண்டாம். நீங்கள் இதைச் செய்தால், தேவையற்ற சிக்கலில் சிக்கக்கூடும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. அதன் மூலம் செலவு அதிகரிக்கக்கூடும்.

​மீனம்:அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் பண பற்றாக்குறை ஏற்படக்கூடும். மேலும், வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் சந்திப்பீர்கள், இதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். நீங்கள் எந்தவிதமான கடனை கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் பயணங்களை தவிர்ப்பது அவசியம். வண்டி, வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். பணியாளர்கள் அவர்களின் முதலாளி மற்றும் பணிபுரியும் தோழர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம், இல்லையெனில் மன அழுத்தம் ஏற்படலாம்.