மதுவுடன் உப்பு கலந்து குடித்தால் என்னவாகும்? தெரிந்து கொள்ளுங்கள்…!

சரக்கு அடிப்பதே தவறு. இதில் இதனுடன் உப்பு கலந்து குடிக்கலாமா கூடாதா?என ஒரு கேள்வி தேவையா என நீங்க கேட்க வருவது புரிகிறது. லாக் டவுன் ரிலிஸ் ஆனதும் கடை திறக்கும் முன்னரே இரவு பகலாக லைனில் நின்று, மது வாங்கிய மொடா குடிகாரர்களுக்கு அல்ல இந்த பதிவு.


சோசியல் ட்ரிங்கராக, அவ்வப்போது மதுவை மருந்து போல் எடுத்து கொள்பவர்களுக்கு தான் இந்த பதிவு.

சிலர் உப்பை கண்ணாடி கோப்பையின் விளிம்பில் தடவி கொடுப்பார்கள். சிலர் மதுவில் உப்பு கலந்து குடிப்பார்கள். சிலர் உப்பு நீரை மதுவில் கலந்தும் குடிப்பார்கள். விஸ்கி, காக்டேய்ஸ்ல் போன்ற சில மதுபானத்தோடு உப்பு சேர்த்து குடிக்கும் போது, உப்பானது மதுவின் கசப்பு தன்மையை குறைக்கலாம். குறைவான தரம் கொண்ட விஸ்கியை இப்படித்தான் அருந்துவார்கள். உயர் தர விஸ்கி, ஸ்காட்ச் போன்றவற்றுள் எதுவும் கலக்காமல் அப்படியே தான் அருந்த வேண்டும்.

உப்பை இப்படி மதுபானத்தோடு குடிக்கும் போது, தசை இறுக்கம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தலைவலி,

தலைசுற்றல், வாந்தி எடுப்பது போல அடிக்கடி குமட்டல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இதனால் ரத்தத்தில் உப்பின் அளவு மாறுபாடு ஏற்படலாம். மது அருந்தி கல்லீரல் கெட்டு போவது உறுதியாகிவிட்டது. எந்த சரக்கிற்கு உப்பு சேர்க்கலாம் சேர்க்க கூடாது என்பதை தெரிந்துகொண்டு உஷாராக சரக்கடித்து நீண்ட ஆயிலுடன் வாழலாமே?