கோவிலில் சாமி ஆடுவது உண்மையா? பொய்யா? இதுவரை யாரும் சொல்லாத உளவியல் ரீதியான காரணங்கள்!

எங்க அம்மாவுக்கு, டீவில் கூட கோவில் மேளசத்தம் கேட்டுவிடக்கூடாது. எல்லா இடங்களிலும் சாமி வந்து விடும். மற்ற நேரங்களில் அம்மாஞ்சி மாதிரி இருக்கும் அவர், சாமி வந்துவிட்டால் எங்கிருந்து அந்த பலம் வருகிறதோ தெரியாது. குறைந்த பட்சம் இரண்டு பேர் வேண்டும் அவரை கட்டுப்படுத்த. மற்ற நேரங்களில் அப்பாவை பார்த்தால், ஒரு வித பயம் கலந்த மரியாதையோடு பேசும் அம்மாவிடம், சாமி வந்துவிட்டால், அப்பா பெட்டிப்பாம்பாக அடங்கிவிட வேண்டும்.


சின்ன வயதில் இதையெல்லாம் ரசித்த எனக்கு, இப்போது அம்மாவிற்கு சாமி வரக்காரணம் பக்தி மட்டும் தானா? வேறு ஏதாவது காரணம் இருக்கா? என்று சிந்திக்க தோன்றுகிறது. நானும் உளவியல் படிப்பு படித்து வருவதால், இதெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் கொஞ்சம் அதிகமானது. அப்போதிருந்து தேடலை தொடங்க, இணையத்தில் பலரின் அனுபவங்களை படித்து தெரிந்துகொண்டேன். அதில் சில காரணங்கள் எனக்கு மிகவும் திருப்திகரமானதாக இருந்தது.

தன்னை அறியாமல் ஒரு உணர்வின் வெளிபாடுதான் சாமி ஆட்டம். அது உணர்ச்சிவசப்படுதல் சம்பந்தப்பட்டது. அவ்விடத்தில் கண்ணை மூடிய நிலையில் அதீத கற்பனையின் வெளிப்பாடுதான் சாமியாடுவது. கடவுள் நம்பிக்கை, ஜோதிடம் மற்றும் சாமி ஆடுதல் இவை அனைத்திற்கும் தொடர்பு உள்ளதாக கருதுகிறேன். நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால், சாமி ஆடுபவர்களுக்கு எல்லா இடங்களிலும் சாமி வராது. உடுக்கை, மத்தளம் இந்த மாதிரி ஒலி உண்டாகும் இடங்களில் மட்டுமே சாமி வரும்.

மத்தளத்தில் இருந்தும் வரும் ஒலியின் அதிர்வெண்ணும், சாமியாடுபவர்களின் ஆழ்மன அலைகளின் அதிர்வெண்ணும் ஒத்துப்போகும் போது, அவர்கள் தன்னிலை மறந்து, ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அப்படியே செய்கின்றனர். இசையின் வேகம் அதிகமாகும் போது, அவர்களின் உக்கிரமும் அதிகமாகும். இசையின் வேகம் குறையும் போது சாமி சாந்த நிலை அடைதல் என்கின்றனர். இந்த சமயத்தில் சாமி சொல்வதாக கூறப்படும் அருள் வாக்குகள், சாமியாடுபவரின் ஆழ்மனதில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளாகும். இதில் இன்னும் இருக்கு, இப்போதைக்கு இதனை அறிந்து கொள்வோம். எங்களுடம் இணைந்திருங்கள். மேலும் பல தகவல்களை பெறலாம்.