கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் விமானப்படைக்கு ஹெலிகொப்டர் வாங்கும் அரசாங்கம்.!! சஜித் அணி குற்றச்சாட்டு..!

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் ஸ்ரீலங்கா விமானப்படைக்கு மேலதிக 04 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்இ பொதுஜன முன்னணிக்கும் இடையில் மறைமுகப் போர் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, அவர்கள் ஆட்சியமைத்தால் சொற்ப நாட்களிலேயே ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும் ஆருடம் வெளியிட்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல, கண்டியிலுள்ள தனது இல்லத்தில் நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது;ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தற்போது உள்ளகப் போர் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இந்த இரண்டு அணியினரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைத்தால் சொற்ப நாட்களிலேயே பிளவடைந்துவிடுவார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியானவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் தனித்து எமது பயணத்தை முன்னெடுப்போம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் தனித்து தங்களது பிரசாரங்களை முன்னெடுக்கின்றார்கள். நாங்களும் தனித்தே செயற்படுகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாங்கள் எதிர்காலத்தில் இணைவதா என்பது குறித்து சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளைஇ ஸ்ரீலங்கா அரசாங்கம் விமானப்படைக்கு பயிற்சிக்காக மேலதிக 04 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லஇ அந்த நிதியினூடாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்படி ஆலோசனையும் கூறினார்.மேலும் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அரசாங்கம் அவசரமாக 4 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையிலேயே இன்று விமானப்படைக்கு பயிற்சிக்காக இரண்டு ஹெலிகொப்டர்கள் உள்ளன. இவற்றுக்கு மேலதிகமாகவே மேலும் 04 ஹெலிகொப்டர்களைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் மிகப்பெரிய செலவினை அரசாங்கம் ஏன் செய்கிறது? மக்களுக்கு நிவாரணம் வழங்கவும்இ மக்களைப் பாதுகாப்பதாகவும் சொல்லிக்கொண்டவர்கள் இன்று அனாவசிய செலவினை செய்யப்போகின்றார்கள்