கொரோனா ஆபத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிரடி உத்தரவு..!!

உலகில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்கும்வரை இலங்கையில் இடைக்கிடையே பரவும் ஆபத்தினைக் கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்கும் சவால்களை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பீசீஆர் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு சமூகத்திற்குள் தொற்று பரவுவதனை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி, சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.தொற்றாளர்களை அடையாளம் கண்டு, ராஜாங்கன-யாய உட்பட ஏனைய இடங்களில் பீசீஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.அத்துடன் தொற்று தொடர்பிலான புதிய தகவல்கள் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டத்தை விரைவாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய செயற்பாடு தொடர்பிலும் ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.