யாழ் போதனா வைத்தியசாலைக்கு N – 95 maskஇனை அன்பளிப்பு செய்த அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனம்!

அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனம் Australia Aid Medical Foundation (AMAF) யாழ் போதனா வைத்தியசாலைக்கு N – 95 maskஇனை அன்பளிப்புச் செய்துள்ளது.அத்துடன் இன்னும் சில நாட்களில் மிக முக்கியமான சில உபகரணங்களையும் அவர்கள் அன்பளிப்புச் செய்ய இருக்கின்றார்கள்.
கடந்த பல வருடங்களாக அவுஸ்திரேலியாவின் AMAF நிறுவனம் யாழ் போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருக்கின்ற பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் பொதுமக்களுக்கும் கதொடர்ச்சியாக பல உதவிகளை செயற்படுத்துவது மிகவும் பாராட்டுதற்குரியது. இந்த நிலையில், தொடர்ச்சியான உதவிக்கு பாடுபடும் AMAF நிறுவனத்துக்கும் அதன் நன்கொடையாளர்களுக்கும் வைத்தியசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.