யாழ் உரும்பிராயில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி.!! பெரும் சோகத்தில் உறவுகள்.!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்குப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை 1-00 மணியவில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உரும்பிராய் வடக்குப் பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது 22 ) என்ற இளம் யுவதி உயிரிழந்துள்ளார்.குறித்த யுவதி இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் அதற்கான அறிகுறிகள் தற்போது இல்லை என வைத்தியார் தெரிவித்துள்ளனர்.குறித்த யுவதி நடனத்துறையில் விளங்கியவர் எனவும் தெரியவருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.