திடீரென மாயமான பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..!!

கடந்த 08 ஆம் திகதி காணாமல் போன ஹொலிவூட் நட்சத்திரம் நயா ரிவேரா நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல ஹொலிவூட் மற்றும் சின்னத்திரை நடிகையான நயா நிவேரா தொலைக்காட்சி விருதுகள் உட்பட 10 விருதுகளை வென்றுள்ளார்.33 வயதுடைய நயா ரிவேரா பீரு ஏரியில் தனது 04 வயது மகனுடன் படகு சவாரி சென்ற நிலையில், காணாமல் போனார்.மகனிடம் நடத்திய விசாரணையில் தாய் தண்ணீரில் குதித்து நீந்தியதாகவும் அதன் பிறகு படகுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதனைத்தொடர்ந்து ஆறு நாட்களாக இடம்பெற்ற பாரிய தேடுதலின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.