கொழும்பின் புறநகரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி..!! இழுத்து மூடப்பட்ட மருத்துவமனை..!!

ராகமை பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளை நடத்த அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளி அந்த மருத்துவமனையில் பணிப்புரியும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைக்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருக்கும் நபரிடம் இருந்து மருத்துவமனை ஊழியருக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.