கொரோனா சந்தேகத்தில் கைதடி சித்த ஆயுர்வேத பீட மாணவி வைத்தியசாலையில் அனுமதி!!

கைதடி சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் கொரோனா சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் சித்த ஆயுர்வேத பீடத்தில் கல்வி கற்கும் பொலன்னறுவையை சேர்ந்த மாணவியொருவரே அனுமதிக்கப்பட்டுள்ளார்.2 நாட்களாக காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகளையடுத்து கொரோனா சந்தேகத்தில் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, நேற்று கொரொனா அறிகுறியுடன் எழுவைதீவிலிருந்து அனுமதிக்கப்பட்ட பொலன்னறுவையை சேர்ந்தவரிற்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென்பது தெரியவந்துள்ளது.